சிம்பு நடிக்கும் புதிய படம்; உருவான மெகா கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகம்.!

சிம்பு நடிக்கும் புதிய படம்; உருவான மெகா கூட்டணியால் ரசிகர்கள் உற்சாகம்.!


vanket-prabhu---simpu---yuvan---manadu

வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு - யுவன் கூட்டணியில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட நிலையில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள், சுந்தர் சி ரசிகர்கள் என அனைவரும் படம் பார்க்க மிகப்பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர், வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு என்ற படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

simpu

ஏனெனில், இதற்கு முன்பு சிம்பு - யுவன் கூட்டணியில் உருவான மன்மதன், வல்லவன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதன் பிறகு உருவான வானம், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் அமைந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதே போன்று வெங்கட் பிரபு - யுவன் கூட்டணியில் உருவான சென்னை-6000028 , மங்காத்தா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து பாடல்களும் ஹிட் ஆனது.

இதனால் உருவாகியுள்ள இந்த மெகா கூட்டணியால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள். மார்ச் மாதம் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது அரசியலை மையமாக கொண்ட கதைகளாகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.