செம கடுப்பாகி, பிக்பாஸ் போட்டியாளர்களை சரமாரியாக வச்சுசெய்த வனிதா.! இதுதான் காரணமா?

செம கடுப்பாகி, பிக்பாஸ் போட்டியாளர்களை சரமாரியாக வச்சுசெய்த வனிதா.! இதுதான் காரணமா?


vanitha tweet about bigboss atrocities

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சரவணனை சேர்ந்து இதுவரை 6 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 10 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். முக்கோண காதல் கதையில் பிசியாக இருந்த பிக்பாஸ் இல்லம் தற்போது சரவணனின் திடீர் வெளியேற்றத்தால் பரபரப்பில் உள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் துவக்கத்தில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே தனது  தந்தையுடன் சண்டைபோட்டு ரோட்டில் போராட்டமெல்லாம் நடத்தி பெரும் சர்ச்சைகளை உருவாக்கியவர்.

 bigboss

அதேபோல, இவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் கத்திகொண்டே, சகப்போட்டியாளர்களுடன் சண்டைபோட்ட வண்ணம் இருந்தார். நிலையில் நிகழ்ச்சி துவங்கி இருந்தாவது போட்டியாளராகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தவாறே உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது கவின், சாக்ஷி, லாஸ்லியா நட்பு, மற்றும் அபிராமி மற்றும் முகேன் உறவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

bigboss

அதில் அவர் இது நட்பே இல்லை, சாக்ஷி, லாஸ்லியா அபி மூன்று பேரும் நட்பு என கூறி மற்றவர்களை குழப்புவது மட்டுமின்றி நட்பின் பெயரை நாசமாக்கின்றனர். மேலும் ஆண் நண்பர்கள் தங்களுக்கு கொடுக்கும் மரியாதையை கெடுத்துகொள்கின்றனர். தனக்கும் வெளியே அதிகமான ஆண் நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களை நான்  பெண்களை விட நான் அவர்களையே அதிகமாக நம்புவேன் என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.