சினிமா

பிக்பாஸ் வனிதாவிற்கு மூன்றாவது திருமணமா? மாப்பிள்ளை இவர்தானா.! உற்சாகத்துடன் அவரே வெளியிட்ட தகவல்!

Summary:

Vanitha third marriage with peter paul

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வனிதா கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2007ஆம் ஆண்டு பிரிந்தனர்.  அதனைத் தொடர்ந்து அவர் ஜெய் ஆனந்த் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் உள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

பின்னர் தனது இருமகள்களுடன் வாழ்ந்துவந்த நடிகை வனிதா, தந்தை விஜயகுமாரிடம் சொத்து தகராறில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைகளில் சிக்கினார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வனிதா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் தனது செயல்களால் ரசிகர்களால் மோசமாக விமர்சனம் செய்யபட்ட அவர், பின்னர்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் சமையல் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் என திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து ரசிகர்கள் பெரும் சந்தேகத்தில் இருந்த நிலையில், ஊடகம் ஒன்றிற்கு நடிகை வனிதா பேட்டி அளித்துள்ளார். அதில், தான் திருமணம் செய்துகொள்ளவுள்ளது உண்மைதான். வரும் ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளேன். கொரனோ ஊரடங்கு காரணமாக நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற உள்ளது.

பீட்டர் பால் மிகவும் எளிமையான, அன்பான மனிதர். இவர் ஒரு விஷுவல் எஃபெக்ட் டைரக்டர். ஏராளமான பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது பெரிய புராஜக்ட் ஒன்றில் பணிபுரிகிறார். அதில் நானும் இருக்கிறேன். அதன் மூலமே எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. எனது யூடியூப் சேனல் ஆரம்பிக்க அவர் எனக்கு பெரியளவில் உதவி செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.


Advertisement