சினிமா

கடைசி வரை என் கூடவே இருமா.. வனிதாவிடம் கெஞ்சிய பிரபல நடிகர்! அவரோட பதிலை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

கடைசி வரை என் கூடவே இருமா.. வனிதாவிடம் கெஞ்சிய பிரபல நடிகர்! அவரோட பதிலை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருளானார்.

வனிதாவிற்கு தற்போது தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக பவர் ஸ்டார் மற்றும் வனிதா இருவரும் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது வனிதா பவர் ஸ்டாருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் பவர் ஸ்டார் வனிதாவை பார்த்து ரொம்ப முடியலைமா, ஓவர் பிரஷர், தலை வேற சுத்துது, நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என் கூட கடைசி வரை இருமா என கூறியுள்ளார். அதற்கு வனிதா, நீங்க ஸ்டண்ட் போட்டீங்க. ஓகே. அதுக்காக சிங்காரவேலன் கமல்மாதிரி கட்டுப் போட்டுக்கிட்டு ஹாஸ்பிடலில் போய் படுத்துருக்கீங்க, என் டேட் வாங்குனீங்களா, நான் இருக்கிறேனானு தெரிஞ்சுக்கிட்டீங்களா. நீங்க பாட்டுக்கு போய் படுத்தா, நான் குஷ்பு மாதிரி ஓடி வர முடியுமா என கேட்கிறார். இருவரும் நக்கலாக பேசிக் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement