சினிமா

பார்ரா! பெரிய கட்டை, கையில் அருவா.. செம கெத்தாக நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா! மிரளும் ரசிகர்கள்!!

Summary:

வனிதாவின் கெத்தான லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இப்படத்தை தொடர்ந்து அவர் சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தார். பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு மூன்றாவது திருமணம் செய்துகொண்டு, பின் விவாகரத்து பெற்று பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்ததாக முன்னேறி வருகிறார்.
அவர் ஹரி நாடார் தயாரித்து, நடித்த டுகே காதல் அழகானது என்ற படத்தில் நடித்துள்ளார். பின்னர் பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம்தாசன் இயக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்  தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் அருகில் பெரிய கட்டை இருக்க, கையில் அருவாவுடன் செம கெத்தாக இருப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். 


Advertisement