ஹீரோவாகும் நடமாடும் நகைக்கடை ஹரிநாடார்! அவருக்கு ஜோடி யார்னு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!

ஹீரோவாகும் நடமாடும் நகைக்கடை ஹரிநாடார்! அவருக்கு ஜோடி யார்னு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படங்கள்!!



vanitha-going-to-act-as-pair-to-hari-naadar

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.  அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் திருமணத்திற்குப் பின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்து பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளரானர்.

அதனைத் தொடர்ந்து அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பின்னர் மூன்று மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பல சர்ச்சைகளை சந்தித்தார். இவ்வாறு வாழ்க்கையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்தித்த வனிதா தற்போது மீண்டும் கதாநாயகியாக களமிறங்க உள்ளார். அதாவது அவர் அனல் காற்று என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

hari nadar

அதனைத்தொடர்ந்து அவர் 2K அழகானது காதல் என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக, ஹீரோவாக நடமாடும் நகைக்கடையாக வலம்வரும் ஹரிநாடார் நடிக்க உள்ளார்.  இவர் பனங்காட்டு படை எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். இந்த நிலையில் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதற்கு கோட் சூட்டில், கழுத்தில் கிலோக்கணக்கில் தங்கத்துடன் ஹரி நாடார் கலந்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.