சினிமா

மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பிரிந்த வனிதாவிற்கு அடித்த ஜாக்பாட்! இனி வேற லெவல்தான்!!

Summary:

பாம்பு சட்டை பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகை வனிதா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்த அவர் பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்த நிலையில் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

 இந்த நிகழ்ச்சியில் மோசமான விமர்சனங்களை பெற்ற வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் வின்னரானார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானார். மேலும் அதற்கேற்றார்போல் அவர் திருமணமான மூன்று மாதங்களிலேயே பீட்டர் பாலை  விவாகரத்து செய்து பிரிந்தார்.

           Vanitha Vijaykumar: வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்கிறாரா? இணையத்தில்  வைரலாகும் அழைப்பிதழ் - is vanitha vijaykumar getting married again this  month | Samayam Tamil

இவ்வாறு தொடர்ந்து பல சர்ச்சைகளை சந்தித்து வந்த வனிதா பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாம்பு சட்டை என்ற படத்தை இயக்கிய ஆதம்தாசனின் அனல் காற்று என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படுகிறதாம்.
 


Advertisement