சினிமா

நீயே ஒரு பிராடு... வனிதாவிற்கு பிரபல நடிகையுடன் வெடித்த காரசாரமான மோதல்! ரணகளமான டுவிட்டர்!

Summary:

Vanitha fight with kasthurinin twitter

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபலமானவர் வனிதா. அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்னர் தனியாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கினார். இந்நிலையில் நடிகை வனிதா கடந்த மாதம் 27ம் தேதி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் சமூகவலைத்தளங்களில்  வனிதாவை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தனர்.  மேலும் பல பிரபலங்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி ஹெலன்,  வனிதா மற்றும் கணவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து, அவருக்கு எதிராக பேட்டியும் கொடுத்து வருகிறார்.  மேலும் அவருக்கு ஆதரவாக சூர்யா தேவி என்பவரும் வனிதாவை தரக்குறைவாக பேசிவருகிறார். 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கருத்து கூறிய நிலையில், அதற்கு வனிதா பதிலடி கொடுக்க டுவிட்டரில் இருவருக்குமிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில், கஸ்தூரி, எலிசபெத் வெலனுக்கு நீ வாழ்க்கை கொடு. உனக்கு தான் வாழ்க்கை இல்லையே, அவருக்கு பணஉதவி செய்து ஆதரவாக இரு. அவருக்கு மதுவுக்கு மற்றும் பெண்களுக்கு அடிமையான கணவன் எதற்கு. அவருக்காகத்தான் நீ மற்றும் தமிழ்நாடு இருக்கிறதே என பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி, எனக்கு வாழ்க்கை இல்லை என்று நீ சொல்ல வேண்டாம். நான் எனது வாழ்க்கையை யூடியூபில் விற்கவில்லை. மேலும் நான் மற்றவரின் வாழ்க்கை துணையை  அவரிடமிருந்து பறிக்கவில்லை. மேலும் 40 வயதில் டீன் ஏஜ் திருமண கனவுகளை காணவில்லை, மேலும் கண்டிப்பாக நான் அவருக்கு ஆதரவாக நிற்பேன் அதுவும் சட்டப்படியாக. என கூறியிருந்தார்.

இதனைக் கண்டு கோபமடைந்த வனிதா,நீயே ஒரு பிராடு. உன் வாழ்க்கையை பற்றி எனக்கு தெரியும். நீ சட்டப்படி அவங்கள கணவர் கூட சேர்த்து வைக்கப் போறியா. முதலில் நீ உன் கணவரை உன்னுடன் சேர்ந்து வாழ சொல்லு என விளாசியுள்ளார். அதற்கு கஸ்தூரி நான் உங்களை மாதிரி தரக்குறைவாக பேச மாட்டேன் வனிதா அக்கா. உங்களுக்கு உங்களது ஸ்டைலிலேயே சரியான பதிலளிக்க வேறு நபர்கள் உள்ளனர். அவர்களுடன் போய் சண்டை போடுங்கள். எனது நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பதிலளித்துள்ளார்.

இவ்வாறு இருவரும் ட்விட்டரில் மாறிமாறி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் இருவரையுமே மோசமாக விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement