யூடியூபில் மோசடி! கடுப்பாகி நடிகை வனிதா அளித்த புகார்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

யூடியூபில் மோசடி! கடுப்பாகி நடிகை வனிதா அளித்த புகார்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!vanitha-complaint-on-youtube-channel-for-fraud-account

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானார். 

ஆனால் எதற்கும் அசராமல் அவர் தன்னை குறித்து தவறாக பேசும் அனைவருக்கும் பதிலளித்து வருகிறார். மேலும் அவர் சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் சமைப்பதற்கான ஏராளமான டிப்ஸ்கள் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் வனிதாவின் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.  இதுகுறித்து வனிதாவிற்கு தெரியவந்த நிலையில்,  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், யூடியூப் நிறுவனம் மோசடி சேனல்காரர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யாரை வேண்டுமானாலும் சேனல் ஆரம்பித்து நடத்த அனுமதி வழங்குகின்றனர். அவர்களைக் குறித்த எந்த விவரங்களையும் சரி பார்ப்பது இல்லை. எனவே யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்கள்களை கண்டிப்பாக ஆதார் எண்ணை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அதனை பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.