சினிமா

கணவரை பிரிந்த சமந்தாவிற்கு வனிதா கொடுத்த தரமான அட்வைஸ்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

கணவரை பிரிந்த சமந்தாவிற்கு வனிதா கொடுத்த தரமான அட்வைஸ்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து 
ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். நாகசைதன்யா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தா சிறிதும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து திரைப்படங்களிலும், வெப் சீரிசிலும் நடித்து வந்தார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பிரியவிருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதனை இருவரும் உறுதி செய்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து சமந்தாவை விமர்சனம் செய்து பல கருத்துக்கள் பரவி வந்தது. இந்நிலையில் சமந்தா வேதனையுடன் ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயமா என இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நடிகை வனிதா சமந்தாவிற்கு ஆதரவாக அட்வைஸ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 
சமூகம் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உன்னுடைய வாழ்க்கையை நீ வாழு! நம்முடைய புகைப்படங்களை மட்டும் தான் மக்கள் பார்க்கிறார்கள். வீடியோக்களை அல்ல. வாழ்க்கை அற்புதமானது, கவலைப்பட்டு அதனை தொலைக்க வேண்டாம். என்ன நடந்தாலும் அதற்கொரு காரணம் இருக்கும். உனது பாதையில் முன்னேறிச் செல் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement