இணையத்தில் வெளியான வலிமை படத்தின் முதல் பாடல் வீடியோ இதுதான்!! வைரலாகும் நாங்க வேற மாறி வீடியோ இதோ!!

இணையத்தில் வெளியான வலிமை படத்தின் முதல் பாடல் வீடியோ இதுதான்!! வைரலாகும் நாங்க வேற மாறி வீடியோ இதோ!!


Valimai movie first Lyrical song video

தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் நாங்க வேறமாதிரி பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித். இந்த படத்தின் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டதும், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்த சம்பவங்களும் அனைவரும் அறிந்ததே.

தற்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முன்னுரமாக நடைபெற்றுவரும்நிலையில், படத்தின் ஒரு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.