சினிமா

என் சங்கீத முல்லை சருகாகி போனது! எஸ்.பி.பி மறைவிற்காக வைரமுத்து வெளியிட்ட கண்ணீர் கவிதை!

Summary:

Vairamuthu wrote emotional poetry for spb

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மரணம் இந்திய அளவில் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது

மேலும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள்,விளையாட்டு வீரர்கள்,  அரசியல் தலைவர்கள் என பலரும் கண்ணீருடன் அவருக்கு இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது கவிதையால் கண்ணீருடன் எஸ்.பி.பிக்கு  அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அதனை அவர் ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு கண்ணீர் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம். இசையை இழந்த மொழியாய் அழுகிறேன் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த கவிதை கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.

 

    


Advertisement