சினிமா

"தமிழ்நாட்டின் பெண்களுக்கு தான் அங்கு ஆதரவு; ஆண்களுக்கு இல்லை" ஏ ஆர் ரஹ்மானிற்கு ஆதரவாக வைரமுத்து வெளியிட்ட வீடியோ!

Summary:

vairamuthu supports ar rahman

பாலிவுட் படங்களில் நான் பணியாற்றுவதை தடுக்க ஒரு கும்பல் செயல்படுகிறது என இசையமைப்பாளர் ரஹ்மான் கூறியுள்ளதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த செய்தி ரஹ்மானின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

AR Rahman was 'starving' to look thin a day before his Oscar win ...

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஹ்மானிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ஏ ஆர் ரஹ்மானிற்கு ஆதரவாக கவிதை நடையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் "அன்பு ரகுமான், வட இந்திய கலையுலகம் தமிழ்நாட்டின் பெண் மான்களை பேணும் அளவிற்கு ஆண் மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டிற்கும் உயிர் வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான், நீங்கள் ஆண் மான், அரியவகை மான், உங்கள் எல்லை வடக்கு மட்டும் இல்லை" என பேசியுள்ளார்.


Advertisement