சினிமா

அசுர வளர்ச்சியடையும் யோகிபாபு! இனி அவருடைய வாய்ப்புகளும் இவருக்குத்தானாம்!

Summary:

Vadivelu chances are moving to actor yogibabu

தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக இருந்தவர் வடிவேலு. என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்த வடிவேலு இன்று தமிழ் சினிமாவின் அடையாளம் எனவே கூறலாம். இவரது நடிப்பு, வசனம், உடல் மொழி என அனைத்தும் படம் பார்க்கும் ரசிகர்களை அவர் பக்கம் இழுக்கும்.

சினிமாவில் கொடிகட்டி பரந்த வடிவேலு ஒருசில அரசியல் ஈடுபாடுகளால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த இவர் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் வடிவேலு.

ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் வடிவேலு. காமெடியனாக நடித்த காலத்தில் ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய். இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவை படும் என்கிறர்கள் தயாரிப்பாளர்கள்.

மேலும், வடிவேலு மீது இருந்த மோகம் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டதாலும் நடிகர் யோகிபாபு அசுர வளர்ச்சி அடைவதால் வடிவேலுவை நாயகனாக வைத்து தயாரிக்க இருந்த அணைத்து படங்களும் தற்போது யோகிபாபு பக்கம் செல்வதாக கூறப்படுகிறது.


Advertisement