"அடிச்சு கேட்டாலும் சொல்லாதீங்க".. பிரபல காமெடியின் சோக பின்னணி..! உண்மையை உடைத்த போண்டாமணி..!!

"அடிச்சு கேட்டாலும் சொல்லாதீங்க".. பிரபல காமெடியின் சோக பின்னணி..! உண்மையை உடைத்த போண்டாமணி..!!


Vadivelu Bondamani Comedy Issue

 

வைகைப்புயல் காமெடி சூப்பர் ஸ்டார் என்று கௌரவிக்கப்படும் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் இருக்கும் வசனங்கள் இன்றளவில் மீம்களுக்கு அதிகம் உபயோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் "அடித்து கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க" என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

இந்த காமெடி காட்சி கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் இடம் பெற்றது. காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தண்ணீருக்குள் ஒளிந்து இருந்த போண்டாமணி திடீரென வெளியே வந்து வடிவேலுவை பார்த்து, என்னை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. 

Vadivelu

அவர்கள் உங்களை வந்து கேட்பார்கள். அடிச்சு கேட்டாலும் சொல்லிடாதீங்க என்று கூறிவிட்டுச் செல்வார். எதைக் கூறக்கூடாது என்பதை அவர் சொல்லாமல் சென்றதால் காவல்துறையினர் வடிவேலுவை நொறுக்கி எடுப்பார்கள். இது பலராலும் ரசிக்கப்பட்ட காமெடியாக இருந்தது. இந்த காமெடிக்கு பின்னணியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை போண்டாமணி பகிர்ந்துள்ளார். 

இந்த காமெடி காட்சியில் அல்வா வாசுவை நடிக்க வைக்க வடிவேலு கூறிய நிலையில், இயக்குனர் போண்டாமணி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வாதிட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து பின்னர், போண்டாமணி நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பின்னரே அங்கு போண்டாமணி வந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.