வடிவேலு மீது 16 பக்க புகார்; எப்ப வேணாலும் நடவடிக்கை! எச்சரிக்கும் பிரபல தயாரிப்பாளர்.
Vadivel

தமிழ் சினிமாவில் எந்த காலத்திலும் அழிக்க முடியாத இடத்தை மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பவர் நகைசுவை நடிகர் வைகைபுயல் வடிவேலு. இன்றும் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஆணி வேராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு தான்.
இந்நிலையில் சமீபத்தில் நேசமணி என்ற பிரண்ட்ஸ் பட பெயர் சமூகவலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டது. 18 வருடங்களுக்கு பிறகு வடிவேலுவின் காமெடி பலரின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வடிவேலு பேட்டியளித்திருந்தார்.
அதில் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவனை பற்றி வடிவேலு மிகவும் மரியாதை குறைவாக பேசியிருந்தார். மேலும் திரைப்பட தயாரிப்பாளர்களை போண்டா டீ திண்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என விமர்சித்திருந்தார்.
இந்த சம்பவம் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வடிவேலுவின் மீது பலரும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா அளித்துள்ள பேட்டியில் வடிவேலு தொழிலுக்கு துரோகம் செய்தவர். தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி தவறாக பேச தகுதி இல்லை. இயக்குனரை ஒருமையில் பேசியது தவறு. இனியொரு முறை சங்கத்தை தவறாக பேசினார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை எச்சரிக்கையாக சொல்கிறேன்.
தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 16 பக்கங்கள் அளவிற்கு புகார் உள்ளது. வெளியிட்டால் மக்கள் மத்தியில் அவர் மீதுள்ள மதிப்பு போய்விடும் என்பதால் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.