வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
வலைதளங்களில் வைரலாகும் வட சென்னை படத்தின் ஒரு பாடல்.
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வடசென்னை. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி கிஷோர், டேனியல் பாலாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் இணைந்த தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி தற்போது இந்த படத்திலும் இணைந்துள்ளது. அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் அவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படமாகவும் அமைய உள்ளது.
அடுத்த மாதம் 17-ந் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்தனத்த என்ற பாடல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கொய்ந்த்தம்மாள் என்ற பாடலை தனுஷ் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.