தமிழகம் சினிமா

வடசென்னை: ரசிகர்களின் பாராட்டு மழையில்; படம் பார்த்தவர்களின் கமெண்ட்ஸ்.!!

Summary:

vada chennai new movie today release

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்து இருக்கும் வடசென்னை படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததால் இந்த படமும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்துள்ளது 

மேலும் இப்படத்தில் தனுஸுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, ராதா ரவி, கருணாஸ், கிஷோர், டேனியல் அன்னி போப் உள்ளிட்டோா் நடித்துள்ளனர்.

Image result for vada chennai

வட சென்னை படத்தின் கதை நீளமாக இருப்பதால் இப்படமானது மூன்று பாகங்களாக வெளி வரும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் முதல் பாகமானது கேரம் போர்ட் விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்துள்ளது. ஏற்கனவே, சேவல் சண்டையை மையமாக வைத்து வெளிவந்த ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான இப்படத்தின் சிறப்பு காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது படம் பார்த்தவர்கள் தங்களின் விமர்சனங்களை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
 

 

 

 

 

 

 

 


Advertisement