அரசியல் சினிமா

நடிகை குஷ்புவிற்கு போன் செய்து பலாத்கார மிரட்டல்.. மர்ம நபர் மீது ட்விட்டர் மூலம் புகார்!

Summary:

Unknown person threatening kushboo for raping

இளம் வயதிலேயே சினிமாவில் பிரபலமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பு. ஒரு காலத்தில் குஷ்புவிற்கு கோவில் கட்டிய கதையெல்லாம் அரங்கேறியது.

தற்போது குஷ்பு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இவர் ஆளும் கட்சியனரின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நடிகை குஷ்புவிற்கு போன் செய்து பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியாள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு அந்த நபரின் போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த நபர் கொல்கத்தாவில் இருந்து தான் கால் செய்துள்ளார் எனக் கூறி கொல்கத்தா போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார் குஷ்பு. இந்த ட்விட்டர் பதிவினை கண்ட கொல்கத்தா போலீசார், முழு விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்புமாறு கூறி மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளனர்.


Advertisement