சினிமா

அடேங்கப்பா.. பிக்பாஸ் ஜூலிக்கு லண்டனில் காத்திருந்த பெரும் ஆச்சரியம், என்னவென தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவிங்க..

Summary:

uk fans gifted to julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது வீரவசனங்கள்  மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி.  இதனால் வீரதமிழச்சி என்று தமிழக மக்கள் அனைவராலும் விரும்பட்ட ஜூலி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்களின் வெறுப்புக்கு ஆளானார்.

 பிக் பாஸ் வீட்டில் தனது சரியில்லாத நட்பாலும், புறம் பேசுதல்,பொய் கூறுதல், நடித்தல் என மோசமான செயல்களால்  மக்கள் அனைவரின் வெறுப்பை பெற்றார் . 

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் ஜூலி பல பிரச்சினைகளை எதிர்கொண்டார்.ஆனால் தற்போது  விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாகிவிட்டார்.

தற்போது ஜூலி படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டன் ரசிகர்களினால் அவருக்கு தமிழச்சி என்று புகைப்படத்துடன் பெயர் அச்சடிக்கப்பட்ட டிசட் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது.அதனை அணிந்த புகைப்படத்தை ஜூலி நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவும்,கிண்டலும் செய்து வருகின்றனர்.


Advertisement