சினிமா

அட.. உதயநிதி ஸ்டாலினா இது! கல்யாணத்தப்போ எப்படியிருக்காரு பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராக வலம் வந்து, பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது ஏரா

தமிழ் திரையுலகில் முதலில் தயாரிப்பாளராக வலம் வந்து, பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக பெருமளவில் பிரபலமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

 தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், நிமிர், சைக்கோ என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். மேலும் அவர் தற்போது திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கிருத்திகா தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த வணக்கம் சென்னை படத்தை இயக்கி தயாரித்தவர். இந்த தம்பதியினருக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகாவின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement--!>