சினிமா

அசத்தல் கூட்டணி.. தம்பியுடன் கைகோர்க்கும் உதயநிதி! இயக்குனர் யாருனு பார்த்தீங்களா! எகிறும் எதிர்பார்ப்பு!!

Summary:

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல், மனிதன், சரவணன் இருக

தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல், மனிதன், சரவணன் இருக்க பயமேன், கெத்து, பொதுவாக என் மனசு தங்கம், சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

ஆனாலும் அவர் சினிமாவிலும் செம பிஸியாக உள்ளார். அவரது கைவசம் தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகிள் 15 போன்ற படங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து அவர் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. 
அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவருடன் நடிகர் அருள்நிதியும் இணையவுள்ளதாகவும் அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Udhayanidhi Stalin and Arulnithi in Bala's next? | Tamil Movie News - Times  of India

அருள்நிதி எப்போதும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சகோதரர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக பரவி வரும் தகவல் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement