சினிமா

வாவ்..ரியலுடன் ரீல்! அஜித் மனைவி ஷாலினி கூட யார் இருக்காங்க பார்த்தீங்களா! வைரலாகும் கலக்கல் புகைப்படம்!!

Summary:

தற்போது தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப

தற்போது தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் வெறித்தனமாக காத்திருந்தனர்.

 இந்நிலையில்  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே1 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் அதுவும்  தள்ளி வைக்கப்பட்டது. நடிகர்அஜித்தின் மனைவி ஷாலினி. இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு தற்போது அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

      

இந்நிலையில் தல அஜித்தின் மனைவி ஷாலினியுடன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் என பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. 


Advertisement