விடாமுயற்சி படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் இதுதானா.! லீக்கான செய்தியால் பரபரப்பு..Trisha role in vidamuyarchi movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் மாடல் அழகியாகவும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் திரிஷா.

trisha

தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார். மேலும் திரைத்துறையில் பிஸியான நடிகையாக இருந்து வரும் த்ரிஷா தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு  நிறைவு பெற்று த்ரிஷா மற்றும் அஜித் சென்னை திரும்புவதாக வீடியோ ஒன்று வெளியானது.

trisha

இவ்வாறு விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் என்ன என்ற கேள்வி எழுந்து வந்தது. இதனை அடுத்து த்ரிஷா இப்படத்தில் சண்டை காட்சிகளிலும், ஸ்டைலிஷாகவும் நடிக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.