96 தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகுமா? திரிஷாவின் உருக்கமான வேண்டுகோள்!trisha requests to suntv not to premier 96 movie

அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘96’. த்ரிஷா முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் வெளியானதில் இருந்து படத்தை பார்த்தவர்கள் தங்களது பள்ளி கால காதலை கண்டிப்பாக நினைவு கூர்ந்திருப்பார்கள்.

பலரின் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘காதலே காதலே’ என்ற பாடல் தான் அதிகம் உள்ளது. அந்த அளவிற்கு ரசிகர்களை கதை மூலம் ஈர்த்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

trisha requests to suntv not to premier 96 movie

இந்நிலையில் படம் வெளியான 33 நாட்களில் 96 திரைப்படம் தீபாவளி தினத்தன்று மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினருக்கும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைப்பற்றி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த படத்தின் கதாநாயகி நடிகை திரிஷா "96 திரைப்படம் வெளியாகி 5 வாரங்கள் தான் ஆகின்றன. இன்னும் 80 சதவீதத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 96 திரைப்படத்தினை இவ்வளவு விரைவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகிறது என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது. எனவே இந்த படத்தை பொங்கல் விழாவின்போது ஒளிபரப்புமாறு சன் டிவியை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.