சினிமா

மீண்டும் கலக்க வருகிறது திரிஷா இல்லன நயன்தாரா...! உற்சாகத்தில் வெர்ஜின் பாய்ஸ்...!

Summary:

trisha-illana-nayanthara-combo-is-back

இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிப்பில் கலக்கி கொண்டிருக்கும் நம்ம ஜி.வி.பிரகாஷ் அவர்கள் நடித்து சென்ற வருடம் திரைக்கு வந்த படம் தான் திரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படம் அனைவரின் மத்தியிலும் மிகவும் வரப்பரப்பு பெற்றது அனைவருக்கும் தெரிந்தது. முக்கியமாக இந்த படம் இளசுகளின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...

இதன் காம்போ தற்போது மீண்டும் இணைந்து கலக்க உள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது என தகவல் வந்துள்ளது. 

இந்த படத்தின் தலைப்பையும் மற்றும் போஸ்ட்டரியையும் பிரபல தமிழ் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் வெளியிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை இந்த படத்தின் போஸ்டர்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றனர். மேலும் இந்த படமும் திரிஷா இல்லனா நயன்தாரா முதல் பாகம் போன்ற அதிக வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் முக்கியமாக இளசுகளின் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது... 


Advertisement