சினிமா

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு! என்னனு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல பிரபலங்களோடு ஜோடி சேர்ந்து ஏராளமான தி

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல பிரபலங்களோடு ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திரிஷா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது நடிகை திரிஷா கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 போன்ற படங்கள் உள்ளது.

மேலும் திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். திரிஷா தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தற்போது மீண்டும் கன்னட சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

நடிகை திரிஷா கன்னடத்தில் பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் இதற்கு முன்பு யு-டர்ன் என்ற படத்தை இயக்கியுள்ளார். புதிய படத்தில் திரிஷா நடிகர் புனித் ராஜ்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement