அடேயப்பா.. இத்தனை வருஷமாச்சா! படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை திரிஷா!எதற்காக தெரியுமா??

அடேயப்பா.. இத்தனை வருஷமாச்சா! படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய நடிகை திரிஷா!எதற்காக தெரியுமா??


Trisha celebrating her 19 years cinema travel

தமிழில் ஜோடி என்ற படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக  நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக அவதாரம் எடுத்த விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல பிரபலங்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்து முன்னணி  நாயகியாக வலம் வந்தார். மேலும் அவர் இதனை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

டாப் ஹீரோயின்களுள் ஒருவராக இருந்த அவர் , இடையில் பட வாய்ப்புகள் எதுவுமின்றி மார்க்கெட் குறைந்து காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்து மீண்டும் ஜொலிக்கத் துவங்கினார்.  பின்னர் அவரது கைவசம் தற்போது
கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள்  உள்ளன. மேலும் அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பின் போது ஸ்பெஷலாக கேக் வெட்டியுள்ளார். அந்த புகைப்படங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.