அதெல்லாம் வேண்டாம்.. நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம்.! போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதில்!!

அதெல்லாம் வேண்டாம்.. நடிகர் மன்சூர் அலிகான் விவகாரம்.! போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதில்!!


trisha-answer-to-police-letter-about-mansoor-alikhan-is

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக பேசியது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மன்சூர் அலிகானிற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். மேலும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 

இதற்கிடையே நடிகர்  மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து டிஜிபிக்கு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

trisha

 இந்நிலையில் நடிகை திரிஷாவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தவறு செய்பவன் மனிதன்.அதை மன்னிப்பவன் தெய்வம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டுமென ஆயிரம் விளக்கு காவல்துறையினர் திரிஷாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  அதற்கு நடிகை திரிஷா, நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பதிலளித்துள்ளார்