"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
ரசிகர்களை ஓட விட்டு சிக்னலை மீறி சென்ற விஜய்..அபராதம் விதித்த காவல் துறையினர்.?
தமிழ் சினிமைல் பிரபல நடிகையாக வலம் வருபவர் விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இளையதளபதி எனும் பெயர் பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் நிறைவு செய்யப்பட்டு திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிலையில், விஜய் அரசியலில் ஈடுபட போவதாக பல செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதன்படி தற்போது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜய் அவரது வீட்டில் இருந்து பனையூர் சென்று கொண்டிருந்தார்.
இதனையறிந்த இவரது ரசிகர்கள் காரை துரத்தி வந்தனர். இதனால் விஜயின் கார் சிக்னலில் நிக்கமால் தொடர்ந்து சென்றது. இதனால் போக்குவரத்து போலீசார் இவருக்கு அபராதம் விதித்தனர். இச்செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.