தமிழில் நம்பர்-1 நடிகை இவர்தானாம்.! வெளியான புதிய தகவல்.!Topheroinin2023

2023-ஆம் வருடம் இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடையவுள்ள நிலையில், கூகுளில் அதிகமாக தேடப்பட்ட தமிழ் நடிகை யார்? என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

trisha

2023 -ஆம் ஆண்டு அதிக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த நடிகை திரிஷா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் தான். இந்த இருவருமே திரைத்துறைக்கு வந்த புதிதில் கொடி கட்டி பறந்தவர்கள் தான். ஆனால் அதன் பிறகு இவர்களுக்கான வரவேற்பு மெல்ல, மெல்ல குறைந்து போனது. ஆனால் தற்போது இருவருமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். திரிஷா பொன்னியின் செல்வன், லியோ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக, நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அதேபோல தமன்னா ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடலுக்கு நடனமாடிய பின்னர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது 2023-ஆம் ஆண்டு இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகை யார்? என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

trisha

இந்த வருடத்தின் தொடக்கத்தில் திரிஷா முன்னணியில் இருந்தாலும், அதன் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடிய பின்னர் தமன்னா, திரிஷாவை முந்தினார். அதன் பிறகு மறுபடியும் த்ரிஷா முதலிடத்திற்கு வர தொடங்கினார். அது குறித்த புள்ளி விவரங்களை ரசிகர்கள் திரிஷா எறா என்ற ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்திருக்கிறார்கள். அதனை நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.