வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன ஆறு அழகிய கதாநாயகிகள்! புகைப்படம்!
பொதுவாக நடிகைகளை பொறுத்தவரை ஒருசில படங்களிலையே பிரபலமாவதும் உண்டு, அதேபோல ஒருசில படங்களிலையே காணாமல் போவதும் உண்டு. அந்த வகையில், ஒருசில படங்களில் நடித்ததோடு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன சில நடிகைகள் பற்றித்தான் இங்கே பார்க்கவுள்ளோம்.
1. நடிகை மானு
தல அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் மானு. காதல் மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும் இந்த படத்தை அடுத்து தமிழ் சினிமாவில் ஒரு படங்களில் கூட மானு நடிக்கவில்லை. 16 வருடங்கள் கழித்து இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ஒருபடத்தில் மட்டும் நடித்திருந்தார்.
2. நடிகை ஷெரின்
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் அதிகப்படங்களில் நடிக்கவில்லை.
3. சாயாசிங்
திருடா திருடி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாயாசிங். தனுஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார் சாயாசிங்.படத்தில் வரும் மன்மதா ராசா பாடலுக்கு மிகவும் அருமையாகா நடனம் ஆடியிருப்பர். இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஒருபடத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார். அதன்பிறகு இவரை ஒரு படத்தில்கூட காணமுடியவில்லை.
4 . ரிச்சா கங்கோபாத்யாய்
தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரிச்சா பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5 . அமோகா
நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ஜே ஜே படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை அமோகா. படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றிருந்தாலும் அமோகாவை அதன்பிறகு ஒரு தமிழ் படத்தில் கூட காணமுடியவில்லை.
6 . ரிச்சா பல்லோட்
விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லோட். ஷாஜகான் திரைப்படம் வெற்றியடைந்தாலும் இவர் பிரபலமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு காதல் கிறுக்கன், அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.