திடீரென அபிஷேக் காலில் விழுந்து கதறிய தாமரை! இதற்காகதானா? வைரலாகும் பரபரப்பு வீடியோ!!today-promo-released-and-viral-KT34N6

பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் திருநங்கையான நமீதா ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பாவனி மற்றும் தாமரையை தவிர 15 போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், மாடல் நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவில், தாமரையிடம் அபிஷேக், எல்லோரும் உனக்காகதான் வேலை பார்த்துட்டு இருக்காங்க என்று கூறுகிறார். இதை கேட்ட தாமரை அபிஷேக் காலில் விழுந்து நீ சொன்ன வார்த்தையே போதும் என கண்ணீருடன் கூறுகிறார். பின்னர் இமான் அம்மாச்சி ராஜூவிடம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்க அவர் தாமரையை காப்பாற்ற விரும்புகிறேன் என்று கூறுகிறார். 

பின்னர் இமான் அண்ணாச்சி இதையே பிரியங்கா மற்றும் அபிஷேக்கிடமும் கேட்க அவர்களும் தாமரையின் பெயரையே கூறுகின்றனர். அதற்கு அவர் ஏன் எல்லோரும் தாமரையின் பெயரையே சொல்கிறீர்கள், நீ ஏன் சின்னப்பொண்ணை காப்பாற்றக்கூடாது? என பிரியங்காவிடம் கேட்கிறார். அதற்கு பிரியங்கா நான் சின்னப்பொண்ணை தான் நாமினேட் செய்திருக்கேன் என்று ஓபனாக சொல்கிறார்.