சினிமா

இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் பிரபலம் யார் தெரியுமா? வெளியே கசிந்த உண்மை!

Summary:

today bigboss elimination is ramya

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டீவியில் கடந்த வருடம் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர்தான் பிக் பாஸ். நடிகர் கமலஹாஷன் இந்த தொடரினியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் ஓன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்ற பிரபலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற படுகின்றனர். அந்த வகையில் இதுவரை மமதி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நான்காவதாக வெளியேற உள்ளது யார்? என ரசிகர்களால் கூட கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது.  

காரணம் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில், ரம்யா, பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி ஆகிய முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர், யார் மிகவும் குறைவான ஓட்டுக்களை பெற்றிருப்பார் என ரசிகர்களால் கணிக்கமுடியவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த வாரம் யார் வெளியேற வேண்டும் என்கிற முடிவை பிக்பாஸ் தான் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல், இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரில் சென்று பார்த்த ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில், இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளது ரம்யா என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ரம்யா வீட்டை விட்டு வெளியேறும் புகைப்படமும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் இது போன்ற தகவல்கள் உலா வந்தாலும், இன்று யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பாப்போம். 


Advertisement