சித்தார்த், ஜிவி பிரகாஷ் படத்திற்கு இப்படியொரு வித்தியாசமான தலைப்பா? வெளியான புதிய தகவல்.!

சித்தார்த், ஜிவி பிரகாஷ் படத்திற்கு இப்படியொரு வித்தியாசமான தலைப்பா? வெளியான புதிய தகவல்.!


title-of-siddharth-with-gv-prakash-movie

தமிழ் சினிமாவில் சொல்லாமலே, பூ, டிஷ்யூம், மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சசி. அதனை தொடர்ந்து அவர் தற்போது சித்தார்த் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோரது நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

அக்கா மற்றும் தம்பியின் பாசத்தை மையமாக கொண்டு புதிய கோணத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் அக்காவாக மலையாளத்தின் முன்னணி நடிகை லிஜோமோள் மற்றும் தம்பியாக ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ளனர். மேலும் லிஜோமோளுக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார்.

siddharth

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி.பிள்ளை இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் சித்து குமார் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த் முதன்முறையாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்க உள்ளார் அதுமட்டுமின்றி ஜிவி பிரகாஷ் பைக் சாம்பியனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ரெட்டகொம்பு என பெயரிட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அது மாற்றம் செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் பச்சை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனை சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.