சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறப் போவது இவரா? வெளியே கசிந்த தகவல்!!

Summary:

இந்த வாரம் பிக்பாஸில் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறப் போவது இவரா? கசிந்த தகவல்!!

அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கி கடந்த சீசன்களை போலவே அன்பு, மோதல், வாக்குவாதங்கள் என விறுவிறுப்பாகவும், ரணகளமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட திருநங்கையான நமிதா சில காரணங்களால் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 

அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் நாடியா சாங் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது பலரது சுய ரூபங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்னப் பொண்ணு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களில் அபிஷேக், சின்னப் பொண்ணு மற்றும் அபினய் ஆகியோர் மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர்களில் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement