தமிழகம் சினிமா

திரௌபதி படத்தில் மொத்தத்தில் என்ன சொல்லிருக்காங்க?

Summary:

thiravubathi movie


மோகன்.ஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் திரௌபதி. போலி பதிவு திருமணங்கள் போன்ற சில சர்ச்சையான விஷயங்கள் பற்றி பேசியுள்ளது இந்த படம். திரௌபதி படம் பெரிய வெற்றி பெற்றிருப்பதாக இயக்குனர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

திரௌபதி படத்தில் பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லை, பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் இல்லை, ஆனால் இந்தப் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. திரௌபதி படம் குறித்து பல விவாதங்கள் நடந்தன.

குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் கட்டாயம் பிள்ளைகளை கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் மற்றும் மாணவர்கள் கவனமாக பார்க்க வேண்டிய பல நல்ல கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்கள் இந்த திரௌபதி படத்தில். இப்படத்தின் இயக்குனர் இப்படத்தினை திரையரங்கில் பார்க்காவிட்டாலும் பரவா இல்லை டவுன்லோட் பண்ணி பாருங்கள், படம் பார்ப்பதற்கு தான் என கூறியிருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

திரௌபதி படத்தில் காட்டப்பட்ட முக்கிய காட்சிகள்:

* போலி திருமண பதிவு.

* போலியான வழக்கறிஞர்கள்.

* போலியான அதிகாரிகள்.

* போலியான அரசியல்வாதிகள்.

* போலியான காதல்.

* போலியான நட்பு.

*தாய், தந்தையை ஏமாற்றி நாடக காதலுக்கு வீட்டை விட்டு வெளியேறும் பெண்களை துணி இல்லாமல் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டுவது.

* ஆபாசம் என்பது பெண்களுக்கு மட்டும் அவமானம் இல்லை ஆண்களுக்கும் அவமானம் தான்.

*குடிநீர் முக்கியம், நிலத்தடி நீர் மற்றும் நிலம் பாதுகாப்பு, மரம் நடுவது, நூறு நாள் வேலை திட்டத்தில் மக்கள் பணம் விரையமாவது.

*ஆணவத்தால் பணத்தை கொண்டு எப்படி வேண்டுமானாலும் தன் ஆதார் மற்றும் ஐடியை தவறாக பயன்படுத்தி பத்திரம் பதிவது.

*பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்தாலும் தரமான வீடியோ ஆதாரம் தேவை மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
 


Advertisement