சினிமா

அடேங்கப்பா! விஸ்வாசம் படத்தின் மூலம் இவ்வளவு வசூலா! ஆச்சரியத்தில் தயாரிப்பாளர்

Summary:

the real collection of viswasam

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா உள்ளிட்டோர் நடித்த படம் 'விஸ்வாசம்'. இந்த படம் கடந்த ஜனவரி 10ம்தேதி, ரஜினியின் 'பேட்ட' படத்துடன் வெளியானது. தமிழகத்தில் விஸ்வாசம் படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. வெளியாகி ஏழு வாரத்துக்கு மேலாக 110 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்தால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், வசூல் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் தற்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘விஸ்வாசம் படம்தான் என் வாழ்நாளிலேயே சிறந்தது. இது ப்ளாக்பஸ்டர் வெற்றி. இதற்காக அஜித், இயக்குநர் சிவா அவர், குழுவுக்கும் தான் மொத்த பாராட்டும் செல்ல வேண்டும். 

sathya jothi producer க்கான பட முடிவு

இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும். எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது. படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

'விஸ்வாசம்' படத்துக்கு கடும் போட்டி நிலவிய போதும் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. அஜித்தை எப்போது ஓப்பனிங் கிங் என்றுதான் அழைக்கிறோம். அவருக்கும் ரசிகர்கள் ஏராளம். அடிமட்ட அளவில் அவரது ரசிகர்களின் பலத்தை அறிந்துகொள்ளும் வகையில் அண்மையில் நான், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டாலும்கூட அவருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்று கூறியுள்ளார்.


Advertisement