சினிமா

தற்போது வெளியான பிரபல நடிகையின் முத்த காட்சி...! ரசிகர்கள் பரபரப்பு...!

Summary:

The present scene of the famous actress ...! Fans excited ...!

தற்போது வளர்ந்து வரும் தொலைக்காட்சி சேனல்களில் zeeதமிழ் சேனலும் ஒன்று. zeeதமிழ் தொலைக்காட்சி சேனல் என்றாலே பொழுது போக்கிற்கு எந்த வித குறைபாடும் இருக்காது.

அதிலும் குறிப்பாக zeeதமிழ் சேனல் குழந்தைகளுக்காகவே சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தனி திறமைகளை வெளிக்காட்டும் வையாக வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் ஒன்றான சரி கம பா என்னும் நிகழ்ச்சி குழந்தைகளுக்காகவே சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகும்.
அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபலமான நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களை அழைத்து வருவார்கள்.

அந்த வகையில் நடிகை நயன்தாராவும், இசையமைப்பாளர் அனிரூத் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். மேலும் அந்த பாடல் நிகழ்ச்சியில் கமலேஷ் என்னும் சிறுவன் தனது பாடும் திறமையால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.

மேலும் இந்த சிறுவன் கானா பாடலையே அதிகம் விரும்பி பாடுவார். அதனாலயே அவருக்கு அதிக பாராட்டுக்களும் ரசிகர்களும் உள்ளனர். அந்த சூழ்நிலையில் கமலேஷ், நடிகை நயன்தாரா வந்த பொழுது இசையமைப்பாளர் அனிரூத் முன்னிலையில் நடிகை நயன்தாரா பத்தி பாடி அசத்தி உள்ளார்.

இந்த பாடலை கேட்டதும் நடிகை நயன்தாரா அந்த கமலேஷ்க்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த முத்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது பெரும் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு முன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை திரிஷாவுக்காக நடனம் ஆடி நடிகை திரிஷாவை அசத்தியுள்ளார். அதை பார்த்து ரசித்த திரிஷா கமலேஷை கட்டி அனைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


Advertisement