வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
நடிகை கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல திரைப்பட முன்னணி நடிகர்களில் நடிகர் விஷாலும் ஒருவர் ஆவார். இவர் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான "சண்டக்கோழி-2" என்னும் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த "சண்டக்கோழி-2" படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் விஷாலுக்கு வில்லியாக நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படம் நடிகர் விஷாலுக்கு 25-வது படம் என்பதால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் உள்ள "செங்கரட்டான் பாறையில" என்னும் பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனை அடுத்து ‘கம்பத்து பொண்ணு’ என்னும் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து அவரே பாடி உள்ளார். இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியிட பட்டது. இந்த பாடலை யுவன் இசையமைத்து பாடியதால் அனைவருமே இந்த பாடலை முழுமையாக பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூடிய
விரைவில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.