தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த இளைய இயக்குநரா? ட்விட்டரில் ட்ரெண்டிங்

the next director of actor vijay


the-next-director-of-actor-vijay

இளைய தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்திற்கு பிறகு, விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 

வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கதிர், விவேக், ஜாக்கி ஜெராப், டேனியல் பாலாஜி போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் வேலைகள் இன்னும் முடியாத நிலையில் தளபதி விஜயின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவ துவங்கிவிட்டது. அதாவது தளபதி 64 படத்தினை மாநகரம் படத்தினை இயக்கிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

actor vijay

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் விருதினை விஜய் டிவியில் பெற்றார். இவர் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயிடம் தனது அடுத்த படத்திற்கான கதையை கூறிவிட்டதாகவும், விஜயும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்வும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.எனினும் இதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அந்த சூழ்நிலையிலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்க துவங்கிவிட்டனர்.