வாவ் செம கியூட் ! எக்கச்சக்க மகிழ்ச்சியுடன் முதன்முறையாக தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்!! குவியும் லைக்குகள்!!

வாவ் செம கியூட் ! எக்கச்சக்க மகிழ்ச்சியுடன் முதன்முறையாக தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்!! குவியும் லைக்குகள்!!


tharshan family photo viral

 பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த இவர் விளவில் ம்பர மாடலாவார். மேலும்  இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tharshan

ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தர்ஷன் நண்பர்களுடன்சுற்றுதல், பிக்பாஸ் கொண்டாட்டம், படவேலை என மிகவும்  பிஸியாக இருந்தார்.மேலும் அவர் ரசிகர் மற்றும் ரசிகைகளுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக தர்ஷன் அவரது அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் கியூட் பேமிலி என பகிர்ந்து வருகின்றனர்.