சினிமா

அவர் மட்டும் இல்லனா நான் நடுத்தெருவுல நின்னுருப்பேன், உருக்கமாக பேசிய தனுஷ்.!

Summary:

thanush talk about yuvan shankar raja

தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி 2 .

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா, வினோத், டோவினோ தாமஸ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பேசிய தனுஷ் கூறுகையில் நான் பார்த்து வியந்த மனிதர்களுள் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. புதுமுகங்கள் நடித்த துள்ளுவதோ இளமை படம் வெற்றியடைய யுவனின் இசைதான் காரணம். அவர் இல்லை என்றால் படம் ஓடிஇருக்காது. நாங்கள் அனைவரும் நடுத்தெருவில்தான் நின்றிப்போம்.நான் அந்த நிலைமையில்தான் இருந்தேன்.

அது மட்டும் அல்ல காதல் கொண்டேன் பட வெற்றிக்கும் அவர்தான் காரணம். 20 வருடமாக எதிர் இருக்கின்ற இசையமைப்பாளரின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது. ஆனால் யுவன் பெயர் மட்டும் அப்படியே இருக்கிறது.

அவர் அடுத்து அஜித் சார் படத்திற்கு இசையமைக்க உள்ளார். அது மிக மகிழ்ச்சியாக உள்ளது என தனுஷ் கூறியுள்ளார்.


Advertisement