சினிமா

நாங்க இருக்கோம்.. தனுஷ் வெளியிட்ட வருத்தமான அறிவிப்பு! ரசிகர்கள் ஆறுதல்!!

Summary:

நாங்க இருக்கோம்.. தனுஷ் வெளியிட்ட வருத்தமான அறிவிப்பு! ரசிகர்கள் ஆறுதல்!!

தமிழ் சினிமாவில்  ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் மிரட்டி வருகிறார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷ், 18 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.தற்போது நாங்கள் இருவரும் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவும் இதனைப் போன்றே பதிவை வெளியிட்டு பிரியப் போவதை உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் நாங்க இருக்கோம் தலைவா என  #WeAreWithYouThalaiva என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.    


Advertisement