சினிமா

தளபதி 63 படத்திலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! இதோ!

Summary:

Thalapathi 63 shooting spot photo

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் தளபதி விஜய். முதல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் மூன்றாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

மேலும், தாப்தி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்பதால் இன்னும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, கதிர், நாஞ்சில் சம்பத் போன்ற முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

https://cdn.tamilspark.com/media/17125kbd-vijay-nayanthara.jpg

இந்நிலையில் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தெறி படத்தில் இண்டர்வெல் சீன்னில் காட்டப்பட்ட சென்னை நேப்பியர் பாலத்தை போல் இப்படத்திற்காகவும் வடபழனியில் மிக பிரமாண்டமாக இப்பாலம் செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செட்டின் புகைப்படம் எப்படியோ வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement