சினிமா

தளபதி விஜயின் அடுத்த படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடிக்கப்போகும் நடிகை யார் தெரியுமா?

Summary:

Thalapathi 63 movie updates and casting list

தளபதி என்றாலே மாஸ்தான். விஜய் படம் வெளியாகா போகிறது என்றாலே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது சர்க்கார் திரைப்படம்.

படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது சர்க்கார் திரைப்படம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க சர்க்கார் படத்திற்கு பிறகு தளபதி யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படும் நிலையில், சர்க்கார் படத்திற்கு பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்குமுன்பு தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. மீண்டும் மூன்றாவது முறையாக இவர்கள் கூட்டணி சேர்வது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

இந்நிலையில் தளபதி 63 படத்தில் தளபதிக்கு ஜோடியா யார் நடிக்க போகிறார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் MS தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகியாக நடித்த கியாரா அத்வானி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சர்க்கார் படத்திற்கு பிறகு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement