சினிமா

அடக்கொடுமையே! தியேட்டருக்குள்ளேயே இப்படியா? தல ரசிகர்களின் கலாட்டாவால் ஆடிப்போன நிர்வாகம்!! வீடியோ உள்ளே

Summary:

thala fans blasting rockers in theatre

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ner konda paarvai க்கான பட முடிவு

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.

இந்நிலையில் அஜித்தை ரசிகர்கள் திரையரங்குகள், சமூகவலைத்தளங்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் சிலர் நேர்கொண்ட பார்வை ஓடிய திரையரங்கின் உள்ளேயே தேங்காய் உடைத்து, பட்டாசை கொளுத்தி போட்டு,வெடி வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கு நிர்வாகத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.