தமிழகம் சினிமா

ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக பேட்ட ட்ரைலருக்கு போட்டியாக வருது விஸ்வாசம் ட்ரைலர்.!

Summary:

thala ajith visvasam movie trailer release date announced

நியூ இயர் ஸ்பெஷலாக தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள படங்கள் தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் தலைவர் ரஜினிகாந்தின் பேட்ட. இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்காக அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். அண்மையில், விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு, வேட்டிகட்டு மற்றும் தல்லே தில்லாலே ஆகிய பாடல்களின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. 

பொங்கலை முன்னிட்டு ஜனவரி-10 அன்று இவ்விஇரண்டு படங்களும் வெளியாகும் என்று என்று அறிவிப்பு வெளியான நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை என்பதால் வருத்தத்துடன் இருந்தனர். 

இந்நிலையில் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 30 அல்லது 31 ஆகிய தேதிகளில் விசுவாசம் ட்ரெய்லர் வெளியாகும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.


Advertisement