சினிமா

தல அஜித்தின் அறிவுரையையே பின்பற்றுகிறேன்........சிவ கார்த்திக்கேயன்.

Summary:

thala ajith-advise-siva karthik

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பையே மூலதனமாக கொண்டு திரையுலகிற்குள் வந்தவர் தல அஜித்.  தற்போது தனக்கென ஒரு இடத்தை கொண்டு  தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை  வைத்திருக்கிறார். அதனால்  இவரை பல இளம் நடிகர்கள் தங்களது ரோல் மாடலாக பின்பற்றுகின்றனர். 

இதை பலர் நேரடியாகவே கூறிவருகின்றனர்.  இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சீமராஜா ப்ரோமோஷனில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

 அதில் அவர் பேசுகையில் ‘ நான் அஜித் சாரை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு புது' உதவேகம்' கிடைக்கிறது.  ஆனால்  அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு மட்டும் குறைவாகவே கிடைக்கிறது.  சமீபத்தில் அவரை சந்திக்கும் பொது பல அட்வைஸுகளை வழங்கினார்.

 அதில் ஒன்று நாம் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை  ஒழுங்காக  கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனால் இன்று வரை நான் சரியாக வரியை கட்டி வருகிறேன் ‘ என சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார்.


Advertisement