தமிழகம் சினிமா

விஸ்வாசம் படம் பார்க்கும் போதே தேம்பி தேம்பி அழுத சிறுமி! கண்கலங்க வைக்கும் வீடியோ

Summary:

thala ajith - visvasam movie - child crying in theater

தனது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்று விசுவாசம் படம் பார்த்த சிறுமி தேம்பித் தேம்பி அழுத வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்துள்ள திரைப்படம் விஸ்வாசம். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா, பேபி அணிக்கா என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

ஆபாச காட்சிகள், பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள், பஞ் வசனங்கள் என எதுவம் இன்றி ஒரு தரமான குடும்ப படமாக உள்ளது விஸ்வாசம் திரைப்படம். அதேபோல செண்டிமெண்ட் நடிப்பில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளார் அஜித். படம் பார்க்கும் ஏராளமானோர் கண் கலங்குவதை பார்க்க முடிந்தது. மேலும் பல திரையரங்கங்களில் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படம் பார்க்க குவிந்து வருகின்றனர்.


Advertisement